தமிழகத்தில் இருமுனை தாக்குதல் நடத்தும் 2 காய்ச்சல்கள்..ஷாக் ரிப்போர்ட்

x

தமிழகத்தில் இருமுனை தாக்குதல்நடத்தும் 2 காய்ச்சல்கள்..ஷாக் ரிப்போர்ட்

தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சலைத் தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 493 பேரில், 47 பேருக்கு மட்டுமே டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 16-ஆம் தேதி, 51 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும்,ஆகஸ்ட் 16-ஆம் தேதி, 53 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 16-ஆம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1784 பேரில், 121 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பார்த்தால், கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் இந்த செப்டம்பர் மாதம் டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்