45 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த ஜெர்மனியின் இரண்டு குழந்தைகள் - பெர்லின் சுவர் தகர்ந்த நாள்..!

x

இரண்டாம் உலகப் போருக்கு காரணமான ஜெர்மனியை தோற்கடித்த நேச நாடுகள், 1945ல் அதை இரண்டு பகுதிகளாக பிரித்தனர்.

ரஷ்யாவின் கட்டுப்பாடில் இருந்த பகுதிகள் கிழக்கு ஜெர்மனி என்றும், அமெரிக்கா, பிரட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த

பகுதிகள் மேற்கு ஜெர்மனி என்றும் தனித் தனி நாடுகளாக மாறின. ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் இரண்டாக பிரிக்கப்பட்டது.

ரஷ்யாவின் மேற்பார்வையில், கிழக்கு ஜெர்மனியில் கம்யூனிசம் அமல்படுத்தப்பட்டு, எதிர்கட்சிகள், தேர்தல்கள், கருத்து சுதந்திரம் ரத்து செய்யப்பட்டது.

மேற்கு ஜெர்மனியில் நாடாளுமன்ற ஜனனாயக அடிப்படையி லான முதலாளித்துவ அரசு உருவானது. மேற்கு ஜெர்மனி வளர்ந்த நாடாக உருவெடுத்தது. ஆனால் கிழக்கு ஜெர்மனி பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கி, சர்வாதிகார ஆட்சியில் தத்தளித்தது.

இதனால் கிழக்கு ஜெர்மனியில் இருந்து மேற்கு ஜெர்மனிக்கு பல ஆயிரம் பேர் தப்பிச் சென்றனர். அவர்களை துப்பாக்கி முனையில் கிழக்கு ஜெர்மன் ராணுவம் தடுத்து வைத்தது.

பிரிக்கப்பட்ட பெர்லின் நகருக்கு நடுவே, ஒரு நீண்ட சுவற்றை கிழக்கு ஜெர்மனி கட்டியது. அதையும் மீறி மேற்கு ஜெர்மனிக்கு சுவற்றை தாண்டி தப்பிச் செல்ல முயன்றவர் களை ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொன்றது.

1980களில் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு, கம்யூனிச அரசுகள் ஒன்றின் பின் ஒன்றாக வீழ்ந்தன.

1989ன் இறுதியில் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையே ஜெர்மனியர்கள் சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். பிரிந்திருந்த குடும்பங்கள் 45 வருடங் களுக்கு பிறகு ஒன்று கூடின.

இதன் தொடர்ச்சியாக, கிழக்கு ஜெர்மனியில் கம்யூனிச அமைப்பு நீக்கப்பட்டு, மேற்கு ஜெர்மனியுடன் இணைக்கப் பட்டது. 45 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி ஒரே நாடாக

இணைந்ததை ஜெர்மனியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி னார்.45 ஆண்டுகளுக்கு பிறகு கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகள் ஒரே நாடாக இணைந்த தினம், 1990 அக்டோபர் 3.


Next Story

மேலும் செய்திகள்