அசுர வேகத்தில் சென்ற லாரிகள் - சிறைபிடித்து போராட்டத்தில் குதித்த மக்கள்

x

திண்டுக்கல் அருகே சாலையை சேதமாக்கும் வகையில் வேகமாக சென்ற லாரிகளை, பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம், கிழக்கு தோட்டம் பகுதியில் சமீபத்தில் ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், இப்பகுதியில் கிராவல் மணலை அள்ளிச் செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால், சாலை பழுதடைவதாக மக்கள் குற்றஞ்சாட்டினர். இதனிடையே, மணல் ஏற்றி வந்த லாரிகளை, அப்பகுதியினர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்