தண்ணீ காட்டி வரும் குற்றவாளிகள் "முடியாத காரியம்" கைவிரித்த கர்நாடக போலீஸ் |

x

500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக போலீசாருக்கு போதை பொருட்கள் கடத்தல் கும்பல் தொடர்ந்து தண்ணீ காட்டி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சி மண்ணச்சநல்லூரில், ஸ்கார்பியோ காரில் இருந்து 8 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள590 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் கார் உரிமையாளரான ஹரிசா என்பவர், கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் வசித்து வருவது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, கர்நாடகாவிற்கு விரைந்த தனிப்படை போலீசார், காரின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தியபோது, அந்த நபர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை சில மாதங்களுக்கு முன் வேறு நபருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுக்குறித்து தகவல்களை கர்நாடக போலீசாரிடம் தெரிவித்த போது, அவர்கள் கர்நாடகாவில் குட்கா பொருள் விற்பனைக்கு தடை இல்லை என்றும், அதனால் இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது இயலாத காரியம் என்றும் ஒத்துழைக்க மறுத்ததாக தெரிகிறது.

தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை போலீசாருக்கு குற்றவாளியின் புகைப்படம் கிடைத்துள்ளதாகவும், விரைவில் குற்றவாளியை நெருங்கி விடுவோம் என்றும், போலீசார் தரப்பில்


Next Story

மேலும் செய்திகள்