Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (29.09.2022) |

x

சென்னையில் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகள்...நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழகத்தில் 50 இடங்களில் நடத்தப்பட இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு....சட்டம் - ஒழுங்கு பிரச்சனை காரணமாக அனுமதி அளிக்க முடியாது என காவல்துறை விளக்கம்.

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க பேரணிக்கும் காவல்துறை அனுமதி மறுப்பு.....பல்வேறு கட்சிகள், அமைப்பினர் அனுமதி கோரியிருந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம்.

கேஜிஎப் 2 பட வசனத்துடன் வீடியோ வெளியிட்ட டி.டி.எப் வாசன்.....மதுக்கரை நீதிமன்றத்திற்கு வந்த போது எடுத்த வீடியோ.

புதுச்சேரியில், மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு.....2ஆவது நாளாக பொறியாளர்கள், ஊழியர்கள் வேலை நிறுத்தம்.

புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் இளம் வல்லுநர்களுக்கான இரண்டாண்டு பயிற்சி....திட்டத்தை தொடங்கி வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்.

பொள்ளாச்சியில் 16 இடங்களில் கையெறி குண்டுகளை வீசுவோம் என மிரட்டல்....காவல்நிலையத்திற்கு வந்த கடிதத்தால் பரபரப்பு.

கலவரத்துக்குள்ளான கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை அரசு ஏற்று நடத்தக் கோரிய வழக்கு....நியாயமான காரணம் ஏதும் இல்லை என உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு .


Next Story

மேலும் செய்திகள்