பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு கொரோனோ தொற்று - விரைந்து நலம் பெற வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

x

தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலாபுரம் தோட்ட இல்லத்தில் தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார். இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ராமதாஸ் விரைந்து நலம் பெற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்