"சிவகங்கையில் உலாவரும் புலி?" வெளியான பரபரப்பு வீடியோ | வன அலுவலர் எச்சரிக்கை

x

சிவகங்கை அருகே புலி உலாவுவதாக இணையத்தில் வெளியான வீடியோ கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் எடுக்கப்பட்டது என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

சாத்தரசன் கோட்டையை அடுத்துள்ள மாடுமறித்தான் கிராமத்தில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்குட்டியை மர்ம விலங்கு கடித்து இழுத்து சென்றதாக கடந்தவாரம் தகவல் பரவிய நிலையில் அப்பகுதியில் வனத்துறையினர் கால் தடங்களை ஆய்வு செய்தனர். 10க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி ஆய்வு செய்தனர். அதில் காட்டு முயல்கள் மட்டுமே பதிவாகியிருந்தது. இந்நிலையில் நேற்று மாலை முதல் சாத்தரசன்கோட்டை அருகேவுள்ள அதப்படக்கி தரைப்பாலம் அருகே புலி உலவுவதாக வீடியோ பரவியது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட வன அலுவலர் பிரபா வெங்கடேசன், அந்த வீடியோ கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியில் எடுக்கப்பட்டது என்றும், அதனை வைத்து வதந்தி பரப்பபடுவதாகவும் தெரிவித்தார். மேலும் இது போல் தவறான தகவல்களை பரப்பி மக்களிடையே பீதியை ஏற்படுத்தினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்