"போலீசாரை அதிர வைத்த திருடன்" - திருடனின் பதிலால் நீதிமன்றத்தில் சிரிப்பலை

x

திருட்டு வழக்கில் கைதாவது தனக்கு அவமானம் எனக்கூறிய கொள்ளையன், தன் மீது அடிதடி வழக்கு பதிவு செய்ய வேண்டுகோள் விடுத்துள்ள சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் செயல்படும் தமிழக அரசின் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான விடுதியில் நடைபெற்ற திருட்டு குறித்து விசாரணை நடத்திய போலீசார், திருட்டில் ஈடுபட்ட சின்னராசு, சுரேஷ் உள்பட நால்வரை கைது செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியபோது , தன் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்தால் அழகல்ல என்று கூறிய சுரேஷ், அடிதடி வழக்கு வேண்டுமானால் பதிவு செய்து கொள்ளுங்கள் என தெரிவித்து அதிர வைத்துள்ளார். பின்னர் கைதானவர்களை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினர் உங்களை அடித்தார்களா என சுரேஷிடம் கேட்டபோது, போலீசார் அன்பால் அடித்தார்கள் என கூறி நகைப்பை ஏற்படுத்தியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்