இறப்புக்கு சென்றவர் வீட்டில் கைவரிசை...நகைகளை திருடிய மர்மநபர்கள்

இறப்புக்கு சென்றவர் வீட்டில் கைவரிசை...நகைகளை திருடிய மர்மநபர்கள்
x

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மைத்துனர் இறப்புக்கு சென்றவர் வீட்டில் 10 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டு உள்ளது. பாஸ்கர் எனபவர் தன் மனைவியின் அண்ணன் இறந்ததால், அவருடைய துக்க நிகழ்வுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், இறந்தவரை அடக்கம் செய்ய பணம் தேவைப்பட்டதால் வீட்டிற்கு வந்த மனைவி, பீரோவை பூட்டாமல் திறந்த நிலையில் வைத்து விட்டு சென்றுள்ளார். இதையடுத்து, துக்க வீட்டில் இருந்து வீடு திரும்பிய கணவன்-மனைவி, வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டு உள்ளதால் போலீசாரிடம் புகார் அளித்திள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்