போலி பாஸ்ப்போர்ட்டில் ஜூட் விட சென்ற பெண் - அப்படியே அல்லேக்காக தூக்கிய போலீஸ் | Chennai | Airport

x

போலி பாஸ்ப்போர்ட்டில் ஜூட் விட சென்ற பெண் - அப்படியே அல்லேக்காக தூக்கிய போலீஸ்

சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் வங்கதேசம் செல்ல முயன்ற, அந்த நாட்டைச் சேர்ந்த பெண்ணை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

மீனம்பாக்கத்தில் இருந்து வங்கதேசம் செல்வதற்கு இந்திய பாஸ்போர்ட்டுடன் வந்த ரீனா பேகம் என்பவரின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அவர் போலி பாஸ்போர்ட்டுடன் வந்தது தெரியவந்தது.

மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்கு வந்த அவர், இந்தியாவில் ஏஜெண்டுகள் மூலம் போலி பாஸ்போர்ட் பெற்றது விசாரணையில் தெரியவந்தது.

அவர் எதற்காக இந்தியா வந்தார் என்பது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்