முக்கிய கட்டத்தில் போர்... ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் அதிபர் வைத்த 5 அதிரடி நிபந்தனை..!

x

முக்கிய கட்டத்தில் போர்... ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் அதிபர் வைத்த 5 அதிரடி நிபந்தனை..!


உக்ரைனுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தும் விதமாக படைகளைத் திரட்ட ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். இதையடுத்து, ஐநா பொதுச்சபையில் உரையாற்றிய ஜெலென்ஸ்கி, பேச்சுவார்த்தைக்கே இடமில்லாத அமைதிக்கான 5 நிபந்தனைகளை முன்வைத்தார்... அதன்படி, பொருளாதார தண்டனைகள், மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவின் வீட்டோ அதிகாரத்தை பறிப்பது உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் ரஷ்யாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்... ஐநா சாசனத்தின் படி அனைத்து உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டும், பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீட்டெடுக்க வேண்டும், பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் உறுதிப்பாடு ஆகிய 5 நிபந்தனைகளையும் ஐநா பொதுச்சபையில் ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார்... அவரது உரையை ஐநா பிரதிநிதிகள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்