மகிழம் பூ மரக்கன்றை நட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

x

உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின்கீழ் காவலர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்."உங்கள் துறையில் முதல்வர்" திட்டத்தின்கீழ் காவலர்களின் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, காவலர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த வருகைப் பதிவேட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையெழுத்திட்டார். முன்னதாக காவல்துறை சார்பில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இசை வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. காவல்துறை இயக்குனர் வளாகத்தில் மகிழம் பூ மரக்கன்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நட்டு வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்