திடீரென தீப்பற்றி எரிந்த சுற்றுலா பேருந்து.. உள்ளே இருந்த 24 பயணிகளின் கதி? - பரபரப்பு காட்சிகள்

x

ஆந்திரா அருகே சுற்றுலா பேருந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம், விஜயவாடா அருகே அரக்கு மலை பகுதியிலிருந்து சுற்றுலா பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. 24 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த அந்த பேருந்து, விஜயநகரம் அருகே வந்த போது திடீரென தீப்பற்றி எரிந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக அதிலிருந்து இறங்கியதால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Next Story

மேலும் செய்திகள்