விதியை மீறி ஒலிக்க வைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.. சுதாரித்துக்கொண்ட அதிகாரி

x

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட வயலா நல்லூர் ஊராட்சியில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மனு அளித்திருந்த பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தையல் மிஷின்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத் தட்டுகளில் ஒலிக்க வைக்காமல் பாட வேண்டும் என்பது அரசின் விதியாகும். பாடல் ஒலித்த போது அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் கண்டும் காணாதது போல் இருந்தனர். இதனை கண்டு சுதாரித்து கொண்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாபு உடனடியாக அதனை நிறுத்துமாறு கூறி விட்டு தாமாக முன் வந்து மைக் முன்பு நின்று தமிழ் தாய் வாழ்த்து பாடலை பாடினார்.


Next Story

மேலும் செய்திகள்