தேர்வில் காபி அடித்த மாணவி..? ஆசிரியை திட்டியதால் விபரீதம்

x

சென்னை பல்லாவரம் அருகே ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த ஹரிணி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் தேர்வில் காபி அடித்ததாக கூறி, ஆசிரியை மாணவியை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்