தமிழகத்தின் அரசியல் வாரிசே..! - பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

x

தமிழகத்தின் அரசியல் வாரிசே" என்று நடிகர் விஜய்-க்கு மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.விஜய் அரசியலுக்கு வருவார் என பல விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவரை அரசியலுக்கு வரவழைக்கும் விதமாக, மதுரையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். ஏற்கனவே வாரிசு அரசியல் என்ற கருத்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வரும் இந்த சூழலில்,"எத்தனை வாரிசுகள் இங்கு வந்தாலும் மக்கள் கொண்டாடும் தமிழகத்தின் அரசியல் வாரிசே" என சர்ச்சைக்குரிய வகையில் வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்