டிப்டாப் லேடி பார்த்த "கேடி" வேலை.. சினிமாவை விஞ்சிய மாஸ்டர் பிளான் - சிக்கியது எப்படி?
டிப்டாப் லேடி பார்த்த "கேடி" வேலை.. சினிமாவை விஞ்சிய மாஸ்டர் பிளான் - சிக்கியது எப்படி?
எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருள்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்திற்கு அதிக அளவிலான போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், எத்தியோப்பியாவில் இருந்து வந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தான்சான்யாவைச் சேர்ந்த பெண் பயணி, காலணியில் மறைத்து கடத்தி வந்த 30 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் போதை பவுடரை பறிமுதல் செய்தனர்.
Next Story