பீகார் முதல்வர் வீட்டிலிருந்து 7 கி.மீ தொலைவில் அரங்கேறிய சம்பவம்.. அதிர்ச்சி காட்சிகள்

x

பீகார் முதல்வர் வீட்டிலிருந்து 7 கி.மீ தொலைவில் அரங்கேறிய சம்பவம்..மாணவியை துப்பாக்கியால் சுட்ட அதிர்ச்சி காட்சிகள்

பாட்னாவில் 15 வயது பள்ளி மாணவி துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் தலைநகர் பட்னாவில் உள்ள இந்திராபுரி பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி, பயிற்சி வகுப்புக்காக சென்று கொண்டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து சென்ற மர்மநபர் ஒருவர், மாணவின் கழுத்து பகுதியில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவிக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பீகார் முதல்வரில் இல்லத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், காதல் விவகாரத்தினால் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்