வீட்டை விட்டு வெளியேற்றிய கணவர் குடும்பத்தினர் - கடப்பாரையை வைத்து வீட்டின் கதவை உடைத்த பெண்

x

வீட்டை விட்டு வெளியேற்றிய கணவர் குடும்பத்தினர் - கடப்பாரையை வைத்து வீட்டின் கதவை உடைத்த பெண் - பரபரப்பு காட்சிகள்

திருவாரூர் மாவட்டம் பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீனாவுக்கும், மயிலாடுதுறை மன்னம்பந்தலைச் சேர்ந்த நடராஜனுக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றுள்ளது. அப்போது, பிரவீனாவின் வீட்டார் 24 சவரன் நகை, இருசக்கர வாகனம் மற்றும் 3 லட்ச ரூபாய் மதிப்பில் சீர் வரிசை உள்ளிட்டவைகளை மணமகன் வீட்டாருக்கு கொடுத்துள்ளனர். இதனிடையே , இருவரும் 3 மாதம் சேர்ந்து வாழ்ந்த நிலையில், வரதட்சனை கேட்டு நடராஜன் குடும்பத்தினர் பிரவீனாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, பிரவீனா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கணவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். இச்சம்பவம், குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்