லோடு ஏற்றியதால் தூக்கிய டிராக்டரின் முன் சக்கரம்.. அப்படியும் விடாமல் ஓட்டிய டிரைவர்

x

கள்ளக்குறிச்சியில் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு செல்லும் ட்ராக்டர் ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள தனியார் கரும்பு ஆலைக்கு ட்ராக்டர் ஒன்றில் கரும்பு லோடு ஏற்றப்பட்டது. அளவுக்கு மீறி லோடு ஏற்றியதில் ட்ராக்டரின் முன்பக்க சக்கரங்கள் மேலே அந்தரத்தில் தூக்கியது. இருந்தும் அதனை பொருட்படுத்தாமல் ஆபத்தான முறையில் அப்படியே ட்ராக்டரை ஓட்டி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்