அரசு அதிகாரியுடன் மனைவி செய்த காரியம்.. 5 வருட சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மின்வாரிய முதன்மை பொறியாளருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
x

ஈரோடு பெரியார் நகரைச் சேர்ந்த நடேசன், மின்சார வாரியத்தில் மண்டல முதன்மை பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். அவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கிடைத்த தகவலின்பேரில், அவருடைய வீட்டில் கடந்த 2008-ஆம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கப் பணம் மற்றும் நகைகளை அவர்கள் கைப்பற்றினர். இதுதொடர்பான வழக்கில், ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதில், நடசேன் மற்றும் அவருடைய மனைவி மல்லிகா ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை அடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்