உச்சக்கட்டத்தை எட்டிய ஆளுநர் - முதல்வர் இடையிலான மோதல்... பதிலடி கொடுத்த கேரள முதல்வர்

x

அமைச்சரவையின் முடிவின்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என அரசியல் சாசனம் கூறுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் செய்தியாளர்களை சந்தித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த கருத்துக்களுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.

கேரள ஆளுநரின் செய்தியாளர் சந்திப்பு நாட்டில் அசாதாரணமானது என்றும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

நாட்டின் அரசியலமைப்பின் படி, மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவர் ஆளுநர் என்றும், நிர்வாக அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆளுநரால் கையெழுத்திடப்பட்ட எந்தவொரு சட்டத்திற்கும் அல்லது முடிவுக்கும் அவர் தனிப்பட்ட முறையில் பொறுப்பல்ல என்றும், அந்தப் பொறுப்பு அரசாங்கத்தினுடையது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

லாட்டரியும், மதுவும் தான் மாநிலத்தின் முக்கிய வருவாய் என்ற ஆளுநரின் கருத்து தவறானது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

கேரளாவின் முக்கிய வருமானம் மது மற்றும் லாட்டரி அல்ல என்றும், மதுவால் அதிக வருவாய் பெறும் முதல் 10 மாநிலங்களில் கேரளா இல்லை என்பதையும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.

இந்த விஷயங்களைப் புரிந்துகொள்ள ஆளுநர் வரவு-செலவுத் திட்ட ஆவணங்களைத் தமக்கு முன்பாகப் பார்ப்பது நல்லது என்று முதலமைச்சர் பதிலளித்தார்.

கேரளாவில் ஆளுநருக்கும், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கும் இடையேயான கருத்து மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்