தாயை பிரிந்து தவித்த குட்டி காட்டெருமை .!! தோளில் சுமந்து சென்று தாயிடம் சேர்த்த வனத்துறையினர்

x

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தாயைப் பிரிந்து தவித்த காட்டெருமைக் குட்டியை வனத்துறையினர் தாயுடன் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்து 3 நாட்களே ஆன காட்டெருமைக் குட்டி தனியார் தேயிலைத் தோட்டத்தில் தாயைக் காணாமல் பரிதவித்து வந்தது... தகவலறிந்து வந்த வனத்துறையினர் குட்டியை மீட்டு, அதன் தாயைத் தேடியுள்ளனர்... எங்கே நடக்க வைத்தால் குட்டிக்கு கால் வலிக்குமோ என்று பயந்து அதைத் தோளில் சுமந்து சென்று... பசிக்குப் பால் ஊட்டி... சுமார் 1 கிலோ மீட்டர் வரை தேடி இறுதியில் குட்டியைக் காணாமல் கத்திக் கூக்குரலிட்ட தாய்க் காட்டெருமையைக் கண்டறிந்து, அதை ஒப்படைத்தனர்... பிள்ளையைக் காணாமல் பரிதவித்த தாய் காட்டெருமை... தனது குட்டியை நாவால் சுத்தம் செய்து ஆனந்தக் கண்ணீர் வடித்தது...


Next Story

மேலும் செய்திகள்