பெண் அனுப்பிய கவர்ச்சி புகைப்படங்கள்.. மாடலிங்-க்கு ஆசைப்பட்டு நடந்த மோசடி

x

கவர்ச்சி புகைப்படங்களை வைத்து மாடலிங் பெண்ணை மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், மாடலிங் துறையில் வாய்ப்பு எனக் கூறி, தனது whatsapp எண்ணிற்கு மெசேஜ் வந்ததாகவும், அதில் இருந்த எண்ணை வைத்து தொடர்புகொண்ட போது, கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும்படி கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அனுப்பிய கவர்ச்சி புகைப்படங்களை வைத்து, 3 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், அந்த நபரின் மொபைல் எண்ணை ஆய்வு செய்தபேது, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த நபரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்