தந்தி மாலை செய்திகள் | Thanthi evening News | Speed News | Thanthi Short News (24.11.2022)

x

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்களுக்கு 4 கோடியே 85 லட்சம் ரூபாய் ஊக்கக்தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்....

சர்வதேச தடகள போட்டிகள், ஆசிய கோப்பை ஹாக்கி மாற்றுதிறனாளிகளுக்கான சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை....

ஓராண்டு காலத்தில் ஆயிரத்து 433 வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது...

விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மெய்யநாதன் தகவல்...

இப்போதுதான் மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதாக பதக்கம் வென்றவர்கள் மகிழ்ச்சி....முந்தைய அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தக்கோரிய வழக்கு...

ஊழல் கண்காணிப்பு துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

வழக்கு விசாரணை டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

2001-02 கல்வியாண்டு முதல், பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி...

இணையதளத்தில் டிசம்பர் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு....

நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்...

காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி அறிவிப்பு....

உட்கட்சி பூசல் விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு உரிய பதில் அளிக்காததால் நீக்கம் என தகவல்....


Next Story

மேலும் செய்திகள்