சென்னை வருகிறார் 'தல' தோனி

x

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி பங்கேற்கிறார். 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில், இறுதி நாள் ஆட்டம் வரும் 9ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. இதனிடையே, போட்டியின் தொடக்க நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தியது போன்றே நிறைவு விழாவையும் பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, வரும் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் நிறைவு விழாவில் மகேந்திர சிங் தோனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்