சாலையில் தீப்பிடித்து எரிந்த வேன் - 11 பேர் துடிதுடித்து பலி

x

தாய்லாந்தில் சாலையில் வேன் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்...தலைநகர் பாங்காக் நோக்கி 12 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று, நகோன் ரட்சசிமா மாகாணத்தில் சாலையில் தடுப்பின் மீது மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. வேனில் இருந்த எரிபொருள் கசிந்து தீப்பிடித்து எரிந்ததில் உள்ளே சிக்கி இருந்த 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உடல்கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்... ஒரே ஒரு இளைஞர் மட்டும் வேனில் இருந்து வெளியே தப்பி உயிர் பிழைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்