டெட் தேர்வர்கள் கவனத்திற்கு..! - வெளியான முக்கிய அறிவிப்பு...

x

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டிற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டிற்கான கணினி வழித் தேர்வு, பிப்ரவரி 3 ந் தேதி முதல் பிப்ரவரி 14 ந் தேதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட்டை, தேர்வுக்கு 3 நாட்கள் முன்பிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பயிற்சி தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ள, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்