3 பேர் செய்த பயங்கர சம்பவம்... விடிய, விடிய நீடித்த பதற்றம்

x

தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தை சேர்ந்த பைனான்சியர் மனோகர் தங்கும் விடுதி ஒன்றும் நடத்தி வருகிறார். மனோகர் முச்சந்தி அருகே உள்ள அவரது அலுவலகத்தில் நண்பர் மணிவேலுடன் பேசிக் கொண்டிருந்த போது, தொழில் போட்டியில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் மனோகரை தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். இதைத் தடுக்க முயன்ற மணிவேலின் கையையும் மர்ம நபர்கள் வெட்டிய நிலையில், மனோகர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். படுகொலையை நிகழ்த்தி விட்டு சாவகாசமாக இருசக்கர வாகனத்தில் ஏறி குற்றவாளிகள் தப்பி ஓடும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில், அதை ஆதாரமாகக் கொண்டு போலீசார் விசாரணையைத் துவங்கியுள்ளனர். மணிவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மனோகரின் உறவினர்கள் மற்றும் சொந்த கிராம மக்கள் நள்ளிரவில் நாகை அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், போராட்டம் கைவிடப்பட்டது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்