டென்னிஸ் தொடர் - நம்பர் ஒன் வீராங்கனை இஹா அதிர்ச்சி தோல்வி

டென்னிஸ் தொடர் - நம்பர் ஒன் வீராங்கனை இஹா அதிர்ச்சி தோல்வி
x

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீராங்கனை இஹா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்றுப் போட்டியில் போலந்தை சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை இஹா ஸ்வியாடெக்கும், பிரான்ஸ் வீராங்கனை அலைஸ் கார்னெட்டும் மோதினர். இதில் 6க்கு 4, 6க்கு 2 என்ற செட் கணக்கில் இஹாவை வீழ்த்தி கார்னெட் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தோல்வி அடைந்த இஹா, தொடரில் இருந்து வெளியேறினார். இந்த தோல்வி மூலம், தொடர்ச்சியாக 37 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இஹாவின் வெற்றி நடை முடிவுக்கு வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்