நிச்சயத்துக்கு சில மணிநேரத்துக்கு முன்...பட்டப்பகலில் இளம்பெண்ணை வீடு புகுந்து கடத்திய 100 பேர்...!

x

தெலுங்கானாவில் வீட்டில் புகுந்து இளம்பெண்ணை கடத்தி சென்றதுடன், இளைஞர்கள் பலர் பெண்ணின் வீட்டை அடித்து சேதப்படுத்தும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. அடிபட்லா கிராமத்தில் வசித்து வரும் 24 வயதான இளம்பெண்ணை, நவீன் ரெட்டி என்பவர் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணிற்கு திருமணம் நிச்சயம் செய்ததை அறிந்த நவீன் ரெட்டி, அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். தனது ஆதரவாளர்களுடன் வந்த நவீன் ரெட்டி, இளம்பெண்ணை கடத்தி சென்றதுடன், வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். தகவலறிந்து விரைந்த போலீசார் கடத்தப்பட்ட பெண்ணை மீட்டதுடன், சம்பவத்தில் தொடர்புடைய 18 பேரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்