"சர்வதேச அளவில் தமிழக வீரர்கள் தடம்பதிக்கின்றனர்" | அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்

x

தென்னிந்திய அளவிலான நகர்ப்புற வீர விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியை விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் நாகையில் தொடங்கி வைத்தார். அங்குள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று உள்ளனர். தொடர்ந்து, வீரர்கள் கராத்தே, குங்ஃபூ, சிலம்பக் கலைகளை நிகழ்த்தி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், சர்வதேச அளவில் தமிழக வீரர்கள் சாதித்து வருவதாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்