கோவிலில் ராணுவ வீரரிடம் பர்ஸ் திருட்டு "கேஷ் கூட எடுத்துக்கிட்டு மற்றதை..ப்ளீஸ்.." உருக்கமான வீடியோ

x

கோவிலில் ராணுவ வீரரிடம் பர்ஸ் திருட்டு "கேஷ் கூட எடுத்துக்கிட்டு மற்றதை..ப்ளீஸ்.." ராணுவ வீரரின் உருக்கமான வீடியோ..போலீசுக்கு வந்த புதிய சிக்கல்

பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ராணுவ வீரரிடம் முக்கிய ராணுவ ஆவணங்கள் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது... ராணுவ வீரரான கேரளாவைச் சேர்ந்த மனோ, நேற்று மாலை பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்... கோயிலுக்கு வெளியே வந்து பார்த்த போது தனது பர்ஸ் காணாமல் போனதை உணர்ந்த மனோ உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார்... ஆனால் அப்பகுதியில் சிசிடிவி வேலை செய்யாத காரணத்தால் திருடனைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது... இதையடுத்து மக்கள் கூட்டம் அதிகம் உள்ள மலைக்கோயில் மற்றும் கிரிவல பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில், பர்ஸ் திருட்டு போனது குறித்து ராணுவ வீரர் மனோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்