மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா... - தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் கண்டனம்

x

வடகொரியா தொடர் ஏவுகணை சோதனை நடத்தி வரும் நிலையில், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில், பெயர் குறிப்பிடப்படாத ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா கிழக்குக் கடலில் ஏவியதாக தென் கொரியா தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்த தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல், வடகொரியாவின் செயலை சகித்துக் கொள்ள முடியாது எனவும், இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்கள் எப்போதும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வடகொரியா உணர வேண்டும் என கண்டனம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்