டீசல் தட்டுப்பாடு.. கேரளாவில் 50 சதவீதஅரசுப் பேருந்து சேவை நிறுத்தம் கடும் அவதியில் பொதுமக்கள்.!!

x

டீசல் தட்டுப்பாடு காரணமாக, கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 50 சதவீத பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம், 135 கோடி ரூபாய் கட்டண பாக்கி வைத்திருப்பதால், டீசல் வழங்குவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்திவிட்டன.

இதனால், 50 சதவீத அரசுப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே, கனமழை காரணமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக, அம்மாநில போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்