கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி...விவசாய நிலத்தில் கிடந்த பெட்டிகள் | விசாரணையில் வெளிவந்த தகவல்கள்

x

கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி...விவசாய நிலத்தில் கிடந்த பெட்டிகள் | விசாரணையில் வெளிவந்த தகவல்கள்


கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்கிரவாரி புதூர் கிராமத்தில் லோகநாதன் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.


கடை நேற்று விடுமுறையாக இருந்த நிலையில் கடையின் முன் பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக உரிமையாளருக்கு தகவல் வந்தது.


இதன்பேரில் கடை உரிமையாளர் கடைக்கு வந்து பார்த்த போது உள்ளே இருந்த 281 சவரன் நகைகள், 30 சவரன் வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.


இதன் மதிப்பு சுமார் ஒரு கோடியே 2 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் கடைக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் காலியான நகைப் பெட்டிகள் கிடந்த சூழலில் அதை போலீசார் கைப்பற்றினர். உடனடியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்