12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு... பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

x

உயர்கல்வியில் எந்த படிப்பில் சேர,12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆர்வம் என்ற விவரங்களை சேகரித்து அனுப்ப, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் ,கல்லூரிகள் குறித்து, வரும் 7 முதல் 9ந் தேதி வரை பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. வரும் 12- ம் தேதி மாணவர்களிடம் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகளுக்கான பட்டியலை சேகரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. உயர்கல்வியில் சேருவதை உறுதிப்படுத்தும் வகையில், பட்டியலை சேகரித்து நான் முதல்வன் திட்ட இணைய பக்கத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்