சசிகலாவின் உறவினர்..ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர்... திடீர் மரணம்

சசிகலாவின் உறவினர்..ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர்...  திடீர் மரணம்

ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் ராவணன் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராதா நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராவணன். சசிகலாவிற்கு உறவினரான இவர்,

ஜெயலலிதாவிற்கு அரசியல் ஆலோசகராக செயல்பட்டார். அப்போது கொங்கு மண்டலத்தை சேர்ந்த பல்வேறு முக்கிய தலைவர்களை ஜெயலலிதாவுக்கு அடையாளம் காட்டினார். சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கிய போது இராவணனையும் கட்சியிலிருந்து ஜெயலலிதா நீக்கினார்.

அதன் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கிய அவர், திருச்சியில் அவரது மகனின் மருத்துவ உயர் படிப்புக்காக அவருடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் மாரடைப்பால் உயிரிழந்தார். இன்று மாலை ராதா நரசிம்மபுரம் கிராமத்தில் அவரது இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்