ஆம்லெட்டில் ஃபிளிக் ஷாட் அடித்த சச்சின்; இப்படியும் ஆம்லெட் போடலாம் போலயே - வைரல் வீடியோ

x

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆம்லெட் போடும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது... கிரிக்கெட் மட்டுமல்லாமல் சுவையான உணவுகளும் சச்சினின் இதயத்திற்கு மிக நெருக்கமான ஒன்று... அவ்வப்போது உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்களை சச்சின் பகிர்வது வழக்கம்... அந்த வகையில், ஒரு உணவகத்தில் தானே தன் கையால் ஆம்லெட் போடும் வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்... ஆம்லெட் போடுவதை சச்சின் அதை கிரிக்கெட்டில் ஃபிளிக் ஷாட்டுடன் ஒப்பிட்டுள்ளார்... அதிலும் பெரிய பெரிய சமையல் கலைஞர்களைப் போல, சாகசம் எல்லாம் செய்துள்ளது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது... சிக்சர் மட்டுமல்ல ஆம்லெட்டும் நல்லாத்தான் போடுவோம் என்று கெத்து காட்டியுள்ள சச்சினின் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது...


Next Story

மேலும் செய்திகள்