"சபரிமலையில் ரூ.330 கோடியாக வருவாய் அதிகரிப்பு"

x

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நடை கடந்த நம்பவர் 16 தேதி மாலை நடைதிறக்கப்பட்டு, 17 தேதி முதல் மண்டலகாலம் தொடங்கி 41 நாட்கள் நடைபெற்றது.

டிசம்பர் 27 தேதி மண்டல பூஜை நடைபெற்று நடை அடைக்கப்பட்டு மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30 தேதி மாலை நடைதிறக்கப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் பக்தர்களின் வருகை அதிகரித்தால் வருவாயும் அதிகரித்து, மண்டல பூஜை வருவாயாக 223 கோடி ரூபாய் கிடைத்ததாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

இதில் அரவணை, அப்பம், மற்றும் காணிக்கையும் அடங்கும், என்று தேவசம் போர்டு தலைவர் ஆனந்த கோபன் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் முன்பதிவு மூலம் சுமார் 45 லட்சத்து 96 ஆயிரத்து 527 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும், இதில், 39 லட்சத்து 69 ஆயிரத்து 422 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்