வெளிநாட்டுக்கு படையெடுக்கும் ரஷ்யர்கள் - மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்த விமான டிக்கெட்டுகள்

x

உக்ரைனுக்கு எதிரான போருக்காக 3 லட்சம் ராணுவ வீரர்களைத் திரட்ட ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், ஏராளமான ரஷ்யர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். உக்ரைன் மீதான போரைத் தீவிரப்படுத்தும் விதமாக ராணுவத்தை அணி திரட்ட ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். ஏற்கனவே ராணுவ பயிற்சி பெற்று வெவ்வேறு துறைகளில் உள்ளோரையும் திரட்டும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அர்த்தமில்லாத போரில் கலந்து கொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்து ஏராளமான ரஷ்யர்கள் வெளிநாடுகளுக்கு பறந்து வருகின்றனர்... அண்டை நாடான ஃபின்லாந்துக்கு செல்ல எல்லையில் கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன... விமான டிக்கெட்டுகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்த நிலையில், எஞ்சியுள்ள டிக்கெட்டுகளுக்கான விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது... போருக்கு தகுதியுள்ள நபர்கள் கட்டாயமாக போருக்கு விரைவில் அழைக்கப்படலாம் என்ற அச்சம் மேலோங்கியுள்ள நிலையில், எல்லைகள் விரைவில் மூடப்படலாம் என்று அஞ்சி ஆண்கள் முடிந்தளவு விரைவாக ரஷ்யாவில் இருந்து வெளியேற முயற்சித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்