ரஷ்யா விமான நிலையத்தை தாக்கிய உக்ரைன்?

x

ரஷ்ய எல்லைக்குள் உள்ள விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களுக்கு உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 10வது மாதமாகத் தொடர்ந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவை கிரீமிய தீபகற்பத்துடன் இணைக்கும் பாலமானது வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டதற்கு உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டியது. அதைத் தொடர்ந்து உக்ரைனிய எரிசக்தி கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களைத் தீவிரப்படுத்திய நிலையில், நேற்று முன் தினம் ரஷ்யாவின் மேற்கில் சரடோவ் மற்றும் ரியாசான் பிராந்தியங்களில் உள்ள 2 விமானப் படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அத்துடன் 2 விமானங்கள் பலத்த சேதம் அடைந்தன. ரஷ்ய எல்லைக்குள் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உக்ரைன் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், உக்ரைனிய நகரங்கள் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ரஷ்யாவ்பின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் எண்ணெய் சேமிப்பு டேங்க்-ஆனது தீப்பற்றின் எரிந்தது. இந்தத் தாக்குதலை நடத்தியதும் உக்ரைன் தான் என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், ரஷ்யா மீதான தாக்குதலுக்கு உக்ரைனை அமெரிக்கா ஊக்கப்படுத்தவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்