"வருவாய் கோட்டாட்சியர் சாதி ரீதியாக பேசுறாங்க.." - விசிக மாவட்ட செயலாளர் குற்றச்சாட்டு

x

திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சாதி ரீதியாக பேசுவதாக விசிக மாவட்ட செயலாளர் குற்றஞ்சாட்டியுள்ளார். திருப்பத்தூர் அடுத்த பொன்னியம்மன் கோயில் தெரு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை, மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டது. அப்போது அப்பகுதி மக்கள், மாற்று இடம் கொடுத்த பின்னர் காலி செய்வதாக கூறி மறியலில் ஈடுபட்டனர். அந்நேரத்தில், விசிக மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் பேசிக் கொண்டிருந்த போது வருவாய் கோட்டாட்சியர் பொதுமக்களின் குணம் குறித்து பேசியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்