நடைபெறாத பணிகள் முடிக்கப்பட்டதாக தீர்மானம்? - பேரூராட்சி தலைவரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

x

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், பேரூராட்சி தலைவரை கண்டித்து துணைத் தலைவர் உள்பட ஒன்பது உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், சாக்கடை கால்வாய், சாலை பணிகள் உள்ளிட்டவை நடைபெறாத நிலையில், அந்த பணிகள் முடிக்கப்பட்டதாக கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது. இதை கண்டித்த பேரூராட்சி துணைத் தலைவர் ராஜா உள்பட ஒன்பது வார்டு உறுப்பினர்கள், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பேசிய பேரூராட்சி தலைவர் லட்சுமி மூர்த்தி, துணைத் தலைவரின் தூண்டுதலின் பெயரில் போராட்டம் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டினார்


Next Story

மேலும் செய்திகள்