14 மாணவர்கள் தற்கொலை நுழைவு தேர்வு மையங்களால் நடந்த கோரம் ராஜஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

x

ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா நகரில் 2022இல் இதுவரை மொத்தம் 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஐ.ஐ.டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரபல தொழிற்கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுகளுக்கான பயற்சி வகுப்புகள் ராஜஸ்தானின் பல நகரங்களில் பெரிய அளவில் நடத்தப்படுகின்றன. நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களின் முக்கிய கேந்திரமாக ராஜஸ்தானின் கோடா நகரும் உருவெடுத்துள்ளது. அங்கு உள்ள ஆயிரக்கணக்கான பயிற்சி மையங்களில் நாடு முழுவதும் இருந்து சுமார் 1.75 லட்சம் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். தினமும் சராசரியாக 12 முதல் 14 மணி நேரம் இவர்கள் பயிற்சி பெறுகின்றனர். இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக இந்த ஆண்டில் இதுவரை 14 மாணவர்கள் அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்