பிரியங்கா காந்தியை குண்டுகட்டாக தூக்கி சென்ற போலீஸ்..!

x

பிரியங்கா காந்தியை குண்டுகட்டாக தூக்கி சென்ற போலீஸ்..!

விலைவாசி உயர்வை கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


டெல்லியில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பிரியங்கா காந்தி தலைமையேற்றார்.


போராட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், தர்ணா செல்ல முயற்சித்த போது போலீசார் தடுப்புகளை போட்டு தடுத்து நிறுத்தினர்.


அப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தடுப்பு மீது ஏறி குதித்தார்.


பின்னர், பிரதமர் இல்லம் நோக்கி சென்ற போது, போலீசார் வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக தூக்கி கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். வாகனத்தில் ஏற மறுத்த பிரியங்கா காந்தியை வலுக்கட்டாயமாக பெண் காவலர் தூக்கும் காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்