பிரதமர் பாதுகாப்பு - யார் கட்டுப்பாட்டில் உள்ளது? - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

x

பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தின், வெளிப்புற பாதுகாப்பு அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீண்டும் தெரிவித்துள்ளார்.

டெல்லி மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, பிரதமர் பாதுகாப்பு குறித்து டிகேஎஸ் இளங்கோவன் கூறியது குறித்து கேள்வி எழுப்ப‌ப்பட்டது.

அதற்கு, உள் பாதுகாப்பு மட்டுமே எஸ்பிஜி கட்டுப்பாட்டில் வரும் என்ற அண்ணாமலை, வெளிப்புற பாதுகாப்பு திருப்திகரமாக இல்லை என்று மாநில அரசே கூறியதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்