பாமக நிர்வாகியின் உயிரை பறித்த மண் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

x

விக்கிரவாண்டி அருகே பாமக நிர்வாகி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் காப்பியாம்புலியூர் பகுதியை சேர்ந்த ஆதித்யன் என்பவர், பாமகவில் மாவட்ட துணை தலைவராக இருந்தார்.

இந்நிலையில் விக்கிரவாண்டி அருகே ஆதித்யன் டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் மடக்கியதாக கூறப்படுகிறது. ஆதித்யனின் கழுத்து, மார்பு பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, அந்த கும்பல் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சென்ற போலீசார், ஆதித்யனின் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மண் எடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, உறவினர்களே கூலிப்படை ஏவி கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்