சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாடு-காணொலி வாயிலாக தொடங்கி வைத்த பிரதமர் மோடி

x

குஜராத்தில் நடைபெறும் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாட்டை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.குஜராத் மாநிலம் ஏகத்தா நகரில் இன்று மற்றும் நாளை நடைபெறும் அனைத்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாடு நடைபெறுகிறது.

இதை டெல்லியில் இருந்தபடி காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்றைய புதிய இந்தியா புதிய சிந்தனை, புதிய அணுகுமுறையுடன் முன்னேறி வருகிறது என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், தற்போது, நாட்டின் கவனம் பசுமை வளர்ச்சியிலும், பசுமை வேலைகளிலும் உள்ளது என கூறினார். சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதத்தில் பல்வேறு இலக்குகளை அடைய, ஒவ்வொரு மாநிலத்தின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பங்கும் மகத்தானது எனவும் பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்