மீண்டும் பழைய அஸ்திரத்தை கையில் எடுக்கும் ஓபிஎஸ்

பொதுக்குழுவிற்கு தடை விதிக்ககோரி மீண்டும் நீதிமன்றத்தை நாட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
x

ஜூலை 11 ம் தேதி நடைபெறவுள்ள பொதுக் குழுவிற்கு தடை கோருவதுடன், கட்சிப் பதவிகளில் மாற்றம் கொண்டுவர தற்காலிக தடை விதிக்ககோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிமுக பொருளாளர் பதவியை தக்க வைக்க நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தை நாடவும் ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற செயற்குழு பொதுக்குழு கூட்டம், கட்சியின் விதிகளை மீறி நடைபெற்றதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, அந்த பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட தேதியில் மீண்டும் பொதுக்குழு நடத்த தடைகோரி மனு தாக்கல் செய்ய உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்